6.7.11

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....







சப்தங்களற்ற இரவுகளின்
மௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்.........
இருளுக்குள் நிலவும்
இரகசிய நடப்புகளை
விழித்திருந்து இரசிக்கும்
உன் தனிமை.........
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


முகில் கூட்டம்
முழுதாய் உரசி போகையிலும்
சீற்றமின்றி நீயிருக்கும் அந்த
காட்சி..........
உனக்கும் முகிலுக்கும் ஏதும் மறைமுக உறவோ?
எனக்குள்ளே சிறு கேள்விகளாய்..........

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


நிலவே நீ
சூரியனை கண்டதும்
சட்டென மறையும்
ரகசியம் தான் என்ன......?
எனக்கு மட்டும்
செவியூடே சொல்லாயோ?
வானத்தோடே மட்டும்-நீ
நிரந்தரமாய் வாழ்கின்றாய்........
வானுக்கும் உனக்கும்
ஏதும் நட்புறவோ?

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


பசுமையைத் தொலைத்த
பட்ட மரங்கள் -உன்
முகம் கண்டு பிரகாசிக்கிறதே.......
சூரியனைக்கண்டு
சாய்ந்த புல் வெளிகள்
பூத்துக்குலுங்குவதாய்
ஒரு தோற்றம்.......
தடி காட்டி
உணவருந்தும் குழந்தாய்
உனைக்கண்ட கணமே
உண்டு தீர்க்கிறதே...
அதற்கான உன் பாசைதான் என்ன?

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



இறுக்கமான தருணத்தில்
இயல்பாய் மகிழும் பொழுதுகள்
நிலவே உனைக்காணும் போதே........
பகலில் உலவும் நிழல் கூட
எனை விட்டு பிரிகிறது
நிலவே உன்
நினைவு மட்டும்
எனை விட்டு பிரிய மறுக்கிறது....

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



செம்பகம்


59 comments:

  1. முழு நிலவு போன்ற அருமையான கவிதை

    ReplyDelete
  2. இயல்பாய் இல்லாத
    தருணங்களிலும்
    இனிமையை தரும்
    உங்களின் தமிழ்
    கவிதை
    என்னமோ.....
    எனக்கு பிடிச்சிருக்கு.....

    ReplyDelete
  3. பிடிக்காதவர் யார்?அருமை!

    ReplyDelete
  4. உங்கள் கற்பனை அதை சொல்லிப்போகும் விதம்
    மிக மிக அழகு அருமை
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு...

    என்று சொல்லியே எல்லாவற்றையும்
    பிடித்திருக்கு என்று சொல்லும் உங்கள் கருணை
    வாழ்க..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  6. எளிய தமிழில் அசத்தலான கவிதை வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  7. உங்க கவிதை ரெம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  8. இறுக்கமான தருணத்தில்
    இயல்பாய் மகிழும் பொழுதுகள்
    நிலவே உனைக்காணும் போதே........அருமையான வரிகள். . .

    ReplyDelete
  9. செண்பகத்துக்குப் பிடிச்சபடியால்தான் இத்தனை வரிகளும் உணர்வோட வந்து இந்தப் பதிவில குந்தியிருக்கு !

    ReplyDelete
  10. அருமையான கவிதை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. நிலவுக்கும் உனக்கும் மறைமுக உறவோ அழகான மொழிநடை சென்பகமும் பிடிச்சு வைத்து அழகு படித்தியிருக்கு  வார்த்தையைகளை. தொடருங்கள் நல்ல கவிதைகளை.

    ReplyDelete
  12. என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....

    ReplyDelete
  13. வணக்கம் சகோ,


    என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//

    காதலில் விழுந்த ஒருவரது மன உணர்வுகளையும்,

    காட்சிப் பொருட்கள் யாவற்றிலும் காதலியினையோ அல்லது காதலனையோ கண்டு மகிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது

    ReplyDelete
  14. நிரூபன் said.சொன்னது
    ..
    வணக்கம் சகோ,
    என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//

    காதலில் விழுந்த ஒருவரது மன உணர்வுகளையும்,

    காட்சிப் பொருட்கள் யாவற்றிலும் காதலியினையோ அல்லது காதலனையோ கண்டு மகிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது



    !!!!நண்பா....ஐயையோ !!!!!!!!!!
    இப்பிடியெல்லாம் சிந்திச்சீட்டிங்களே..அப்படி எந்தக்கற்பனைகொண்டும் நான் எழுதவில்லை...
    நிலவை ரசித்துதான் இந்தக்கவிதையை எழுதினேன் சகோ,,,,,,,,,,,,,,,,,
    எங்கெங்கோவெல்லாம் போறீங்களே......
    இனியொரு தடவை அப்படி நினைத்து எழுதிப்பார்க்கிறேன்.......

    ReplyDelete
  15. இதோ வந்துட்டேன் விடிவெள்ளி

    அது சரி இந்தமாதிரி யோசிக்கவேயில்லைன்னு சொல்லிட்டு திரும்பவும் அதே யோசனையில இன்னொன்னுன்னு சொல்லறது என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு

    நல்லா இருந்தது ரசித்தேன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  16. enakkum unnaiyum un kavithaiyaiyum pidichchirukku,,....

    ReplyDelete
  17. என்னமோ.....
    எனக்கு நிலவை பிடிக்கலை... காரணம்
    அது தேய்ந்து வளர்ந்து போவது தான்
    ஆனா....?
    எனக்கு விடிவெள்ளியை பிடிச்சிருக்கு..காரணம்
    இருள் போக ஒளி வருமே
    ஈழத்திற்குத் தேவை விடிவெள்ளிதான்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said..சொன்னது.
    முழு நிலவு போன்ற அருமையான கவிதை


    !!!ஐயா உங்கள் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  19. A.R.ராஜகோபாலன் said...
    இயல்பாய் இல்லாத
    தருணங்களிலும்
    இனிமையை தரும்
    உங்களின் தமிழ்
    கவிதை
    என்னமோ.....
    எனக்கு பிடிச்சிருக்கு.....


    A.R.ராஜகோபாலன் அண்ணா என்னமோ உங்கள் கருத்து எனக்கு பிடிச்சிருக்கு...
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  20. சென்னை பித்தன் said....சொன்னது...
    பிடிக்காதவர் யார்?அருமை!



    ஐயா உங்களை அல்ல.....என்னை!!!hahahahahaha..

    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....

    ReplyDelete
  21. Ramani said...சொன்னது...
    உங்கள் கற்பனை அதை சொல்லிப்போகும் விதம்
    மிக மிக அழகு அருமை
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்


    !!!!உங்கள் அன்பான கருத்துக்கள் என்னை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்துகிறது....
    தொடர்கிறேன் ....தொடர்ந்து வாருங்கள்....
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....

    ReplyDelete
  22. சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு...

    என்று சொல்லியே எல்லாவற்றையும்
    பிடித்திருக்கு என்று சொல்லும் உங்கள் கருணை
    வாழ்க..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    உங்களின் வாழ்த்துக்களால் என் படைப்புகள் நிச்சயம் வளரும்...
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....

    ReplyDelete
  23. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    எளிய தமிழில் அசத்தலான கவிதை வாழ்த்துக்கள் சகோ..


    உங்கள் அசத்தல் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  24. தமிழ் உதயம் said...
    உங்க கவிதை ரெம்ப பிடிச்சிருக்கு.


    எனக்கும் உங்க படம் ரொம்ப பிடிச்சிருக்கு!!
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.....

    ReplyDelete
  25. பிரணவன் said...
    இறுக்கமான தருணத்தில்
    இயல்பாய் மகிழும் பொழுதுகள்
    நிலவே உனைக்காணும் போதே........அருமையான வரிகள். . .


    உங்க அருமையான கருத்து ரொம்ப பிடிச்சிருக்கு...
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  26. ஹேமா said...சொன்னது..
    செண்பகத்துக்குப் பிடிச்சபடியால்தான் இத்தனை வரிகளும் உணர்வோட வந்து இந்தப் பதிவில குந்தியிருக்கு !


    அக்கா சரியா சொன்னீங்க......
    எனது வலைபூ தொடக்கத்திலிருந்து இன்றுவரைக்கும் உங்களின் வருகையும்,ஏனைய நண்பர்களின் பின்னூட்டங்களும்,ஊக்கமும் எனக்கோர் உந்துசக்தியாக இருந்தது....
    அதனால்தான் இப்பிடி வந்து குந்துகிறது வரிகள்...

    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  27. ATHAVAN said...
    அருமையான கவிதை வாழ்த்துக்கள்..

    சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  28. அனுபவம் said...
    nalla kavithai vaalththukkal!




    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  29. சி.பி.செந்தில்குமார் said...
    குட்!!



    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  30. Nesan said...
    நிலவுக்கும் உனக்கும் மறைமுக உறவோ அழகான மொழிநடை சென்பகமும் பிடிச்சு வைத்து அழகு படித்தியிருக்கு வார்த்தையைகளை. தொடருங்கள் நல்ல கவிதைகளை.


    !!!!Nesan அண்ணா என்னமோ உங்கள் கருத்து எனக்கு பிடிச்சிருக்கு...
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  31. கவி அழகன் said...
    என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



    !!!1கவிதையின் அழகனுக்கே பிடிச்சதென்றால்.....
    அப்ப நல்லாய்த்தான் இருக்கு...hahahaha...
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  32. நிரூபன் said...
    வணக்கம் சகோ,


    என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//

    காதலில் விழுந்த ஒருவரது மன உணர்வுகளையும்,

    காட்சிப் பொருட்கள் யாவற்றிலும் காதலியினையோ அல்லது காதலனையோ கண்டு மகிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது...


    சகோ/உங்கள் ரணகளமான கருத்திற்கும்,அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  33. இன்றைய கவிதை said...
    இதோ வந்துட்டேன் விடிவெள்ளி

    அது சரி இந்தமாதிரி யோசிக்கவேயில்லைன்னு சொல்லிட்டு திரும்பவும் அதே யோசனையில இன்னொன்னுன்னு சொல்லறது என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு

    நல்லா இருந்தது ரசித்தேன்

    நன்றி
    ஜேகே



    hahahahahahahahah!!!!!
    ......சகோ என்னமோ உங்க கருத்து எனக்கும் பிடிச்சிருக்குங்க...
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  34. vargi said...சொன்னது
    enakkum unnaiyum un kavithaiyaiyum pidichchirukku,,....



    !!ஒருவருடங்களாய் எனதுபடைப்பை வாசித்துவிட்டு மூச்சு பேச்சின்றி போனது ,உங்களை அப்ப பிடிக்கலத்தான்,ஆனால் என்னமோ இப்ப பிடிச்சிருக்கு.........hahahahahah!!!!
    உங்களது தொடர் ஊக்கத்தால்த்தான் எனது பதிவுகள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது....
    இன்றிலிருந்து கருத்துரையிட மறக்காதீங்க அக்கா.....okya,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம் said...
    என்னமோ.....
    எனக்கு நிலவை பிடிக்கலை... காரணம்
    அது தேய்ந்து வளர்ந்து போவது தான்
    ஆனா....?
    எனக்கு விடிவெள்ளியை பிடிச்சிருக்கு..காரணம்
    இருள் போக ஒளி வருமே
    ஈழத்திற்குத் தேவை விடிவெள்ளிதான்

    புலவர் சா இராமாநுசம்..


    ஐயா நல்ல கற்பனை நிறைந்த கருத்துக்கள்.....
    அன்பிற்கும் வரவிற்கும் ,ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  36. இந்த வரிகள் தான் இனிமை என்று கூற துடித்து குழம்பிப்போனேன் .... அனைத்தும் என்னை .கவர்ந்தது... என்னை ஒரு கவிஞனாக மெருகேற்ற வழிப்பாதை கண்டேன்.
    mahes..
    www.maheskavithai.blogspot.com

    ReplyDelete
  37. உங்களுடைய மொழி அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  38. மிகவும் அழகான கவிதைகளை தந்திருக்கிறீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  39. பிடிச்சிருக்கு.....செம!!!!!!!!!!!!!! :)

    ReplyDelete
  40. //சப்தங்களற்ற இரவுகளின்
    மௌனங்களையே தின்று வாழும்
    உன் பொழுதுகள்.........//

    //என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//

    அருமைங்க... வார்த்தை தேர்வு..
    எனக்கும் பிடிச்சிருக்கு..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. நிலவை பார்த்து செம்பகம் பாடும் கவிதை ......ஆஹா ...அருமை

    ReplyDelete
  42. Maheswaran.M said...
    இந்த வரிகள் தான் இனிமை என்று கூற துடித்து குழம்பிப்போனேன் .... அனைத்தும் என்னை .கவர்ந்தது... என்னை ஒரு கவிஞனாக மெருகேற்ற வழிப்பாதை கண்டேன்.
    mahes..



    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,என்னை ஊக்கப்படுத்திய திறனிற்கும்,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,

    ReplyDelete
  43. ந.மயூரரூபன் said...
    உங்களுடைய மொழி அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே...


    சகோ/ உங்கள் கவித்திறனுக்கு என் கவிதை ஒரு தூசு.இருந்தும் உங்கள் வாழ்த்தால் ஊக்கம் பெற்றேன்.
    தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...

    /உங்கள் முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,

    ReplyDelete
  44. இராமசாமி ரமேஷ் said...
    மிகவும் அழகான கவிதைகளை தந்திருக்கிறீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.....


    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,

    ReplyDelete
  45. சரவணன் said...
    பிடிச்சிருக்கு.....செம!!!!!!!!!!!!!! :)


    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,

    ReplyDelete
  46. யோஹன்னா யாழினி said...
    //சப்தங்களற்ற இரவுகளின்
    மௌனங்களையே தின்று வாழும்
    உன் பொழுதுகள்.........//

    //என்னமோ.....
    எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....//

    அருமைங்க... வார்த்தை தேர்வு..
    எனக்கும் பிடிச்சிருக்கு..
    வாழ்த்துக்கள்.



    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,

    ReplyDelete
  47. koodal bala said...
    நிலவை பார்த்து செம்பகம் பாடும் கவிதை ......ஆஹா ...அருமை



    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...

    ReplyDelete
  48. // சப்தங்களற்ற இரவுகளின்
    மௌனங்களையே தின்று வாழும்
    உன் பொழுதுகள்......... /

    எனக்கு பிடித்த வரிகள்

    அன்புடன்
    கருணா கார்த்திகேயன்

    ReplyDelete
  49. " என்னமோ.....
    எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு....."

    உங்களின் நேற்றைய பதிவு கருத்துக்கு நன்றி
    தமிழ் மணத்தில் என்னாலும் பதிவு சரியாக வெளியிட முடியவில்லை..
    பதில் கிடைத்ததும் நிச்சயம் உங்களுக்கும் சொல்கிறேன்..நன்றி

    ReplyDelete
  50. உங்களுக்குப் பிடித்த காட்சிகளும், தருணங்களும் அழகு.

    நீங்க ஈழத்து உறவு என்று நினைக்கிறேன், சரியா!!

    ReplyDelete
  51. கருணாகார்த்திகேயன் said...
    // சப்தங்களற்ற இரவுகளின்
    மௌனங்களையே தின்று வாழும்
    உன் பொழுதுகள்......... /

    எனக்கு பிடித்த வரிகள்

    அன்புடன்
    கருணா கார்த்திகேயன்



    !!!சகோ/உங்கள் முதல் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...

    ReplyDelete
  52. குணசேகரன்... said...
    " என்னமோ.....
    எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு....."

    உங்களின் நேற்றைய பதிவு கருத்துக்கு நன்றி
    தமிழ் மணத்தில் என்னாலும் பதிவு சரியாக வெளியிட முடியவில்லை..
    பதில் கிடைத்ததும் நிச்சயம் உங்களுக்கும் சொல்கிறேன்..நன்றி


    !!!சகோ/உங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...


    சகோ/எதிர்பர்க்கிறேன் ,,,,,,,,,,

    ReplyDelete
  53. Rathi said...
    உங்களுக்குப் பிடித்த காட்சிகளும், தருணங்களும் அழகு.

    நீங்க ஈழத்து உறவு என்று நினைக்கிறேன், சரியா!!

    !!!சகோ/உங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,,,,தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்திற்காக காத்திருக்கும் விடிவெள்ளி...


    !!!நண்பி/தமிழீழ தேசியப்பறவையை போட்டிருக்கிறன்...பிறகென்ன சந்தேகம்

    ReplyDelete
  54. தண்ணிலவிற்கு ஓர்
    தனிக்கவிதை
    இயல்பு நடையில் ஓர்
    இனிய கவிதை

    பிடிச்சிருக்கு

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  55. மகேந்திரன் said...
    தண்ணிலவிற்கு ஓர்
    தனிக்கவிதை
    இயல்பு நடையில் ஓர்
    இனிய கவிதை

    பிடிச்சிருக்கு

    அன்பன்
    மகேந்திரன்


    உறவே உங்கள் புதிய வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. ''...நிலவே நீ
    சூரியனை கண்டதும்
    சட்டென மறையும்
    ரகசியம் தான் என்ன......?
    எனக்கு மட்டும்
    செவியூடே சொல்லாயோ?
    வானத்தோடே மட்டும்-நீ
    நிரந்தரமாய் வாழ்கின்றாய்........
    வானுக்கும் உனக்கும்
    ஏதும் நட்புறவோ?...'''
    nallavatikal.
    Vetha. elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete