12.8.10

எதுவரைக்கும்.....................




விறைத்த மனசு
வரண்ட பாதங்கள்
கரடுமுரடான கரங்கள்
கலங்கிய விழிகள்
இடிந்து போன கன்னங்கள்
புன்னகை இழந்த உதடுகள்
எதுவரைக்கும்........


உதிர்ந்து போன கனவுகள்
இடிந்து போன பிரமிட்டுக்களாய்
நித்தம் நித்தம்
நெஞ்சைப் பிளக்க
விரக்தியின் வாசலில்
விம்முகின்ற மனங்கள்
எதுவரைக்கும்................


புத்தம் புதிய மனிதராய்
பூமியில் பிரசவிக்கையில்
அழுகைக் குரலோடு
வெளிவந்த போது
அப்போது அறியவில்லை
ஏனென்ற கேள்விக்கு
இப்போது மட்டும்
விடை புரிகிறது


வலிகளையே நிரந்தரமாக்கி
வாழ்க்கையின் விழிம்பைத்தொட
முயல்கின்ற மனிதர்களின்
ஏக்கங்களாய் .............
செம்பகம்.











10 comments:

  1. very very nice.......

    ReplyDelete
  2. //வலிகளையே நிரந்தரமாக்கி
    வாழ்க்கையின் விழிம்பைத்தொட
    முயல்கின்ற மனிதர்களின்
    ஏக்கங்களாய்//

    அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  3. //உதிர்ந்து போன கனவுகள்
    இடிந்து போன பிரமிட்டுக்களாய்
    நித்தம் நித்தம்
    நெஞ்சைப் பிளக்க
    விரக்தியின் வாசலில்
    விம்முகின்ற மனங்கள்
    எதுவரைக்கும்................//

    வெகுநாளைக்கு பிறகு உங்கள் கவிதை படிப்பதில் மகிழ்ச்சியை வலியை ஏக்கங்களை தவிப்பை துடிப்பை தாங்கிவந்த கவிதை கனமாய்...எல்லாம் மாறும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. அன்பின் நண்பா...

    வணக்கம்.
    உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

    நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

    நன்றி.
    நட்புடன்
    சே.குமார்

    ReplyDelete
  5. ரசித்த வரிகள்.. நல்லாயிருக்கு

    ReplyDelete
  6. வலிகளை ஏந்தி கொண்டு நிற்கிறது உங்கள் வரிகள் தோழரே...
    வாழத்துக்கள். தொடருங்கள்....

    ReplyDelete
  7. சே.குமார் said...
    இந்திரா said...
    சீமான்கனி said...
    சே.குமார் said...
    thank for your comments

    ReplyDelete
  8. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete
  9. தமிழ் தங்களிடம் விளையாடி இருக்கிறது..
    அருமையான கவிதை..


    ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ? ...

    ReplyDelete